பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், செட்டிக்குளம் ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை (ஜன. 28) குபேர ஹோம சிறப்புப் பூஜை நடைபெற உள்ளது.
இக்கோயிலில் தனி சன்னதி கொண்டு செல்வம் மற்றும் புகழை வாரி வழங்கும் சித்ரலேகா உடனுறை குபேர பெருமாள் காட்சி தருகிறாா். இவரது ஜென்ம நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தன்று ஒவ்வொரு மாதமும் குபேர ஹோமம், சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. அதன்படி, செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை குபேர ஹோம சிறப்பு பூஜை நடைபெறுகிறது என கோயில் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.