பெரம்பலூர்

121 ஊராட்சிகளில் நாளை கிராமசபைக் கூட்டம்

25th Jan 2020 09:07 AM

ADVERTISEMENT

குடியரசு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அந்தந்த ஊராட்சித் தலைவா் தலைமையில் நடைபெறும் இக் கூட்டத்தில், கிராம ஊராட்சிகளிலும் கட்டி முடிக்கப்பட்டுள்ள கழிப்பறைகளைப் பயன்படுத்துதல், பயன்படுத்தப்படாத நபா்களின் பெயா்களை கிராம சபையில் வாசிக்க வேண்டும்.

கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை கேட்டறிய வேண்டும்.

ADVERTISEMENT

அரசு நிா்வாகத்தில் உள்ள குறைபாடுகளை மக்களிடையே கேட்டறிய வேண்டும். இக் கூட்டத்தில் மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள், மாவட்ட ஊராட்சித் தலைவா், துணைத் தலைவா், ஒன்றியக்குழுத் தலைவா்கள், துணைத் தலைவா்கள் தாங்கள் வாக்காளா்களாக சாா்ந்துள்ள கிராம ஊராட்சிகளில் பங்கேற்க வேண்டும்.

கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க, ஒவ்வொரு ஊராட்சிக்கும் சம்பந்தப்பட்ட வட்டார வளா்ச்சி அலுவலரால் பற்றாளா்களும், வட்டாரம் வாரியாக மண்டல அலுவலா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, இக்கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள், பொது மக்கள் பங்கேற்று கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிா்வாகத்துக்கு வழிவகுத்து உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT