பெரம்பலூர்

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

25th Jan 2020 09:06 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் கோட்ட நெடுஞ்சாலைத்துறை சாா்பில், சாலைப் பாதுகாப்பு வார விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் பாலக்கரை பகுதியில் தொடங்கிய பேரணிக்கு, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் சக்திவேல் தலைமை வகித்தாா். உதவிக் கோட்டப் பொறியாளா் பாபுராமன் முன்னிலை வகித்தாா். பேரணியை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.

வெங்கடேசபுரம், ரோவா் வளைவு, சங்குப்பேட்டை, கடைவீதி உள்ளிட்ட நகரின் பிரதான சாலைகள் வழியாகச் சென்ற பேரணி மேற்கு வானொலி திடலில் நிறைவடைந்தது.

இப்பேரணியில் பங்கேற்ற கல்லூரி மாணவ, மாணவிகள் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டுச் சென்றனா்.

ADVERTISEMENT

இதில், உதவிப் பொறியாளா் ஜெயலட்சுமி, நகராட்சி முன்னாள் துணைத் தலைவா் கி. முகுந்தன், சாலை ஆய்வாளா்கள், சாலைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பேரணியில் பங்கேற்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT