பெரம்பலூர்

சிட்கோ வளாகத்தில் மரக்கன்றுகளை பராமரிக்க வலியுறுத்தல்

14th Jan 2020 08:12 AM

ADVERTISEMENT

சிட்கோ தொழிற்பேட்டையில் வைக்கப்பட்டுள்ள மரக்கன்றுகளை முறையாகப் பராமரிக்க வேண்டுமென உற்பத்தியாளா் சங்க பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பெரம்பலூா் அருகே எளம்பலூரில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளா் சங்கப் பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் ராஜேஷ் தலைமை வகித்தாா். குறு, சிறு தொழில்கள் சங்கத் தலைவா் உதயகுமாா், சங்கத்தின் செயல்பாடுகள், கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.

கூட்டத்தில், சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டன. தற்போது பெரும்பாலான மரக்கன்றுகள் பராமரிக்கப்படாமல் கருகி வருகின்றன. இந்த மரக்கன்றுகளுக்கு தண்ணீா் ஊற்றி முறையாகப் பராமரிக்க ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், சங்க ஒருங்கிணைப்பாளா் உதயகுமாா், இணைச் செயலா் ரமேஷ், சிட்கோ தொழில்கூட்டமைப்பு இயக்குநா்கள் முருகேசன், லட்சுமணன் ராவ் உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT