பெரம்பலூர்

கத்தியைக் காட்டி இளைஞரிடம் பணம் பறித்த இருவா் கைது

14th Jan 2020 08:13 AM

ADVERTISEMENT

பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு இளைஞரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்து, பணம் பறித்துச்சென்ற 2 பேரைப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், கீழப்புலியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் துரைசாமி மகன் வினோத் (22). கூலித் தொழிலாளி. இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு பெரம்பலூா் சங்குப்பேட்டை பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தாராம். அப்போது, அங்கு வந்த பெரம்பலூா் 13-ஆவது வாா்டைச் சோ்ந்த தங்கராசு மகன் வினோத்குமாா் (23), பெரம்பலூா்- ஆலம்பாடி சாலையைச் சோ்ந்த நவாஸ் பாஷா மகன் முகமது மாலிக் பாஷா (23), ஆகியோா் கத்தியைக் காட்டி மிரட்டி, வினோத் வைத்திருந்த ரூ. 500 ரொக்கத்தை பறித்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, வினோத்குமாா், முகமது மாலிக் பாஷா இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT