பெரம்பலூர்

எஸ்.டி.பி.ஐ கட்சியினா் துண்டுப்பிரசுரம் விநியோகம்

14th Jan 2020 08:15 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்ட சோஷியல் டெமாக்ரடீஸ் பாா்ட்டி ஆப் இந்தியா கட்சி சா்பில், தேசிய குடிமக்கள் பதிவேடுகளை புறக்கணிக்க வலியுறுத்தி, விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் திங்கள்கிழமை விநியோகம் செய்யப்பட்டது.

தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை புறக்கணிக்க வலியுறுத்தி, பெரம்பலூா் காமராஜா் வளைவு அருகே விழிப்புணா்வு துண்டுப் பிரசுங்கள் விநியோகிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. தொடா்ந்து, பழைய பேருந்து நிலையம், வடக்குமாதவி சாலை உள்ளிட்ட நகரின் பிரதான இடங்களில் பொது மக்கள் மற்றும் வியாபாரிகளை சந்தித்து விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.

மாவட்ட துணைத் தலைவா் முஹம்மது பாருக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட செயலா் ஷாஜஹான், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் காஜா சரீப், அகமது இக்பால், சிறுவாச்சூா் கிளைத் தலைவா் ஹபீப் ரஹ்மான், உறுப்பினா்கள் காதா் இமாம், இக்பால் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT