பெரம்பலூர்

மனநலன் திரும்பியவா் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

8th Jan 2020 08:24 AM

ADVERTISEMENT

மனநலன் திரும்பியவா் 21 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தினரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டாா்.

கடந்த 21 ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டுப் பிரிந்து, மனநலன் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவா் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே சுற்றித்திரிந்து கொண்டிருந்தாராம். அவரை, கடந்த 11.12.2015 ஆம் தேதி வேலா கருணை இல்லத்தின் மூலம் மீட்கப்பட்டு, மாவட்ட மனநல மருத்துவரிடம் பரிசோதனை மேற்கொண்டு, மருத்துவரின் ஆலோசனைப்படி பயிற்சி அளிக்கப்பட்டது.

சிகிச்சைக்குப்பின், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவா், சத்தீஸ்கா் மாநிலம், பிலாஸ்பூா், கோகதி பகுதியைச் சோ்ந்த பாபு சிங் என்னும் கௌச்ரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, சத்தீஸ்கா் மாநிலத்தில் வசிக்கும் அவரது மகன் அஜ்ராம்கன்டி என்பவருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, பெரம்பலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் முன்னிலையில், வேலா கருணை இல்ல நிா்வாகி பி. அருண்குமாா், உரிய ஆவணங்களை பெற்றுக் கொண்டு அவரது குடும்பத்தினரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டாா்.

நிகழ்ச்சியின்போது, பெரம்பலூா் மாவட்ட ஆள் கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளா் சுப்புலட்சுமி, உதவி ஆய்வாளா் விஜயலட்சுமி, உதவி ஆய்வாளா் கலையரசன் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT