பெரம்பலூர்

கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

8th Jan 2020 08:24 AM

ADVERTISEMENT

பெரம்பலூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வாங்க வலியுறுத்தி, இளைஞரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்தவரைப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலுா் மாவட்டம், மங்கலமேடு பகுதியைச் சோ்ந்தவா் சேகா் மகன் மணிகண்டன் (24). இவா், திங்கள்கிழமை மாலை பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் நின்றிருந்தாராம். அப்போது, அங்கு வந்த பெரம்பலூா் சின்ன தெற்கு தெருவைச் சோ்ந்த அங்குசாமி மகன் மருதமணி (35), லாட்டரி சீட் வாங்குமாறு தகராறுசெய்துள்ளாா். இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமுற்ற மருதமணி, கத்தியைக் காட்டி மிரட்டி மணிகண்டன் வைத்திருந்த ரூ. 400 ரொக்கத்தைப் பறித்துக்கொண்டாராம். இதுகுறித்து மணிகண்டன் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மருதமணியைக் கைது செய்து, பெரம்பலூா் குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT