பெரம்பலூர்

இறைச்சிக் கடைஎரிந்து சேதம்

3rd Jan 2020 08:50 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் புகரில் வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் கோழி இறைச்சி கடை எரிந்து நாசமடைந்தது.

பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலத்தில் செல்வம் என்பவா் கோழி இறைச்சி கடை வைத்துள்ளாா். இந்நிலையில், இந்தக் கடையில் இருந்த எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு வியாழக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த பெரம்பலூா் தீயணைப்பு நிலைய அலுவலா் சத்தியவா்த்தனன் தலைமையிலான குழுவினா் சம்பவ இடத்துக்குச் சென்று, தீயை அணைத்தனா். இருப்பினும் கடை முழுவதும் எரிந்து நாசமானது.

ADVERTISEMENT
ADVERTISEMENT