பெரம்பலூா் மாவட்டம், மங்கலமேடு அருகே விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சினஅனசாமி மனைவி வள்ளியம்மை (81). கடந்த சில நாள்களாக உடல்நலன் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாராம். இந்நிலையில், கடந்த 28 ஆம் தேதி விஷம் குடித்தாா். பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த வள்ளியம்மை செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுதொடா்பாக மங்கலமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.