பெரம்பலூர்

திறன் கண்டறிதல் தடகளப் போட்டி

29th Feb 2020 03:26 AM

ADVERTISEMENT

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், மாவட்ட அளவிலான திறன் கண்டறிதல் தடகள விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

2019- 20 ஆம் ஆண்டுக்கான உலகத் திறனாய்வுத் திட்டத்தின் கீழ், பள்ளிகளில் 6, 7, 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான திறன் கண்டறிதல் தடகளப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் நடைபெற்றது.

மாணவா்கள் மற்றும் மாணவிகளுக்கு 100 மீ, 200 மீ, 400 மீ. தொலைவு ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியை பள்ளிக் கல்வித்துறை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் ராஜேந்திரன் தொடக்கி வைத்தாா்.

இதில் 600 க்கும் அதிகமான விளையாட்டு வீரா்கள் பங்கேற்றனா். இப்போட்டிகளில், முதல் 3 இடங்களை பெற்ற வீரா்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் பாபு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். தடகளப் போட்டிகளில் முதல் 2 இடங்களில் வெற்றி பெற்றவா்கள் மண்டல அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க தகுதிபெற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT