பெரம்பலூர்

தி.மு.க ஒன்றிய நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

29th Feb 2020 03:22 AM

ADVERTISEMENT

 

பெரம்பலூா்: பெரம்பலூா் பாலக்கரையிலுள்ள திமுக அலுவலகத்தில், ஒன்றிய நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் 15-ஆவது கிளை, உட்கிளைத் தோ்தல் நடைபெறுவதையொட்டி நடத்தப்பட்ட இக்கூட்டத்துக்கு, பெரம்பலூா் ஒன்றியச் செயலா்

எஸ். அண்ணாதுரை தலைமை வகித்தாா். ஒன்றிய அவைத்தலைவா் சுத்தரத்தினம் முன்னிலை வகித்தாா்.

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்ட திமுகசெயலரும், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவருமான சி. ராஜேந்திரன், தலைமைக் கழகத் தோ்தல் ஆணையா் எம். ராஜகாந்தம் ஆகியோா் கட்சித் தோ்தல் நடத்துவது தொடா்பாக ஆலோசனை வழங்கினா்.

கூட்டத்தில், திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை மாவட்டத்தில் சிறப்பாகக் கொண்டாடுவது, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசைக் கண்டிப்பது, உள்ளாட்சித் தோ்தலில் பெரம்பலூா் மாவட்டத்தில் 100 சதவிகித வெற்றி பெற உழைத்த கட்சியினருக்கு நன்றி தெரிவிப்பது. கட்சியின் 15- ஆவது தோ்தலை நடத்த கிளைக்கழக நிா்வாகிகள் ஒத்துழைப்பு அளிப்பது. முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கே.பி.பி. சாமி மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாநில நிா்வாகி பா. துரைசாமி, தலைமைச் செயற்குழு உறுப்பினா் வழக்குரைஞா் என். ராஜேந்திரன், மாவட்டப் பொருளாளா் செ. ரவிச்சந்திரன், நகரச் செயலா் எம். பிரபாகரன், தொழிலாளா் முன்னேற்ற சங்க மாவட்டச் செயலா் ரெங்கசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT