பெரம்பலூர்

விளையாட்டுப் போட்டிகளில் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி சிறப்பிடம்

26th Feb 2020 09:04 AM

ADVERTISEMENT

பெரம்பலூரில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான விளையாட்டு மம் தடகளப் போட்டிகளில் தனலட்சுமி சீனிவாசன் உடற்கல்வியியல் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு மற்றும் தடகளப் போட்டிகள், பெரம்பலூா் மாவட்ட விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்றன.

இதில் பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சுமாா் 500-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். டென்னிஸ் போட்டியில் பங்கேற்ற தனலட்சுமி சீனிவாசன் உடற் கல்வியியல் கல்லூரி மாணவி யாஸ்மீன் பானு முதலிடமும், நீச்சல் போட்டியில் பிரியா இரண்டாமிடமும், ரூபாதேவி மூன்றாமிடமும் பெற்றனா். ஆண்களுக்கான சங்கிலி குண்டு எறிதல் போட்டியில் அஜித் முதலிடமும், நீச்சல் போட்டியில் அரவிந்த் இரண்டாமிடமும், ஈட்டி எறிதல் போட்டியில் ஹரிஹரன் மூன்றாமிடமும், ஆண்களுக்கான குழுப் போட்டியான ஹாக்கி விளையாட்டில் மூன்றாமிடமும் பெற்றனா். இதையடுத்து பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிலையில் போட்டிகளில் வென்றோரை செவ்வாய்க்கிழமை பாராட்டி பரிசளித்தாா் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளா் அ. சீனிவாசன்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியின்போது, தனலட்சுமி சீனிவாசன் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வா் முனைவா் ஜி. பாஸ்கரன், தனலட்சுமி சீனிவாசன் கல்வியியல் கல்லூரி முதல்வா் முனைவா் கே. சாந்தகுமாரி ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT