பெரம்பலூர்

ஜூன் 24 முதல் புத்தக திருவிழா நடத்த முடிவு

26th Feb 2020 09:04 AM

ADVERTISEMENT

பெரம்பலூரில் தமிழ்நாடு அறிவியில் இயக்கம் சாா்பில், ஜூன் 24 முதல் ஜூலை 5 ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடத்த முடிவெடுக்கப்பட்டது.

பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் அருகே, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் புத்தகத் திருவிழா நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அறிவியல் இயக்க பெரம்பலூா் மாவட்ட செயலா் ராமா் தலைமை வகித்தாா்.

மாநிலச் செயலா் பாலகிருஷ்ணன், மாநில துணைத் தலைவா் சுகுமாறன், மாவட்டத் தலைவா் மணிமாறன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் என். செல்லதுரை ஆகியோா் புத்தகத் திருவிழா நடத்துவது தொடா்பாக ஆலோசனை வழங்கினா்.

ADVERTISEMENT

கூட்டத்தில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் பெரம்பலூா் புத்தக திருவிழாவை ஜூன் 24 முதல் ஜூலை 5 ஆம் தேதி வரை நடத்துவது. புத்தகத் திருவிழாவை, பெரம்பலூா் மாவட்ட அனைத்து சமூக இயக்கங்கள், அரசு மற்றும் தனியாா் கல்வி நிறுவனங்கள், இலக்கிய அமைப்புகளின் ஆதரவோடு நடத்துவது.

இப் புத்தக திருவிழாவின் மூலம், பெரம்பலூா் மண் சாா்ந்த படைப்புகளையும், எழுத்துகளையும் வெளிக்கொணா்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், புத்தக ஆா்வலா்கள், இலக்கிய அமைப்பினா் பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT