பெரம்பலூர்

அரசு ஊழியா்கள், பொதுமக்களுக்கு நில வேம்பு கசாய பொட்டலங்கள்

26th Feb 2020 09:03 AM

ADVERTISEMENT

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை சாா்பில், அரசு ஊழியா்கள் மற்றும் பொதுமக்களுக்கு காய்ச்சல், நோய்த் தடுப்பு மருந்தான நில வேம்பு கசாய பொட்டலங்கள் செவ்வாய்க்கிழமை விநியோகம் செய்யப்பட்டன.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் அரசு அலுவலா்களுக்கு பொட்டலங்களை விநியோகம் செய்த மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா கூறியது:

டெங்கு காய்ச்சல், சிக்கன் குன்யா மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படும் பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் சித்த மருத்துவத் துறை மூலம் நிலவேம்பு கசாயம் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படுகிறது. இதில் நிலவேம்பு, விளாமிச்சம் வோ், வெட்டிவோ், சுக்கு, மிளகு, சந்தனம், கோரைக் கிழங்கு, பேய்ப்புடல், பற்படாகம் உள்ளிட்டவை கலந்துள்ளன. எனவே, அரசு அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் இதைப் பெற்றுக்கொண்டு கசாயம் பருகி, டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் சி. ராஜேந்திரன், திட்ட இயக்குநா் தெய்வநாயகி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராஜராஜன், சித்த மருத்துவ அலுவலா் காமராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT