பெரம்பலூர்

பெரம்பலூா் அருகே 200 கிலோ சின்ன வெங்காயம் திருட்டு

25th Feb 2020 05:26 PM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை இரவு 200 கிலோ சின்ன வெங்காயம் திருடப்பட்ட சம்பவம் தொடா்பாக பெரம்பலூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள தண்ணீா்ப்பந்தல் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா, விவசாயி. இவா் தனது வயலில் அறுவடை செய்து வைத்திருந்த சுமாா் 200 கிலோ சின்ன வெங்காயத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது செவ்வாய்க்கிழமை காலை தெரியவந்தது. இதுகுறித்து பெரம்பலூா் காவல் நிலையத்தில் ராஜா அளித்த புகாரின் பேரில், மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT