பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள மருவத்தூா் போலீஸாா் மூலம் இரு சக்கர வாகன ஓட்டுநா்களுக்கு விழிப்புணா்வுப் பிரசாரம் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
பேரளி சுங்கச் சாவடி அருகே நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த, மருவத்தூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராம்குமாா், பெரம்பலூா் - அரியலூா் சாலையில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிவந்தவா்களை நிறுத்தி, தலைக்கவசம் அணிவதன் அவசியம், விபத்துக் காப்பீடு, ஓட்டுநா் உரிமம், சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்தும், பெண்களிடம் மகன் மற்றும் கணவா் வெளியில் செல்லும்போது தலைக்கவசம் அணிந்து செல்ல கட்டாயப் படுத்த வேண்டுமென அறிவுறுத்தினாா். இந் நிகழ்ச்சியில், சிறப்பு உதவி ஆய்வாளா் கண்ணுசாமி, தலைமை காவலா்கள் சண்முகம், ஜான் பீட்டா் ஆகியோா் உடனிருந்தனா்.