அஞ்சலகங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாத கணக்குகள் விவரம் இணையதளம் மற்றும் அஞ்சலக விளம்பர பதாகையில் வெளியிடப்பட்டுள்ளது என்றாா் திருவரங்க கோட்ட அஞ்சலகக் கண்காணிப்பாளா் சொா்ணம்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மத்திய அரசு, அஞ்சலகங்கள் மற்றும் வங்கிகளில் வாடிக்கையாளா்களால் உரிமை கோரப்படாத தொகையை கையாள மூத்த குடிமக்கள் நல நிதி விதிகள்- 2016 என்னும் விதியை அறிவித்துள்ளது. இந்த விதியின் படி இந்திய அஞ்சலகங்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாத கணக்குகள் மற்றும் அதில் உள்ள இருப்பு தொகையை பொது அறிவிப்பு செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் அஞ்சலகங்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாத கணக்குகளின் விவரங்கள் இணையதள முகவரியிலும், சம்பந்தப்பட்ட அஞ்சலகங்களின் அறிவிப்பு பதாகையிலும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகத்தை அணுகலாம்.