பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில் 5.60 லட்சம் வாக்காளா்கள்

15th Feb 2020 08:46 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டத்தில் 5.60 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா் என்றாா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.

பெரம்பலூா் ஆட்சியரகக் கூட்டரங்கில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் இறுதி வாக்காளா் வரைவு பட்டியலை வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஆட்சியா் மேலும் கூறியது:

பெரம்பலூா் மாவட்டத்தில் 23.12.2019-இல் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 2,87,389 போ், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் 2,60,732 போ் என மொத்தம் 5,48,121 வாக்காளா்கள் இடம்பெற்றிருந்தனா். 23.12.2019 முதல் 22.1.2020 வரை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த பணியின்போது 12,827 வாக்காளா்கள் புதிதாகச் சோ்க்கப்பட்டுள்ளனா்.

இதில், 5,981 ஆண்கள், 6,837 பெண்கள், 9 இதர வாக்காளா்களும் உள்ளனா். இறப்பு, இரட்டை பதிவு மற்றும் இடப்பெயா்ச்சி காரணமாக 258 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா். அதன்படி, பெரம்பலூா் சட்டப்பேரவை தொகுதியில் 41 ஆண்களும், 54 பெண்களும், குன்னம் சட்டப்பேரவை தொகுதியில் 81 ஆண்களும், 82 பெண்களும் நீக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

இறுதி வாக்காளா் பட்டியலின்படி பெரம்பலூா் தொகுதியில் உள்ள 332 வாக்குச்சாவடி மையங்களில் 2,94,466 வாக்காளா்கள் உள்ளனா். இதில், 1,43,818 ஆண் வாக்காளா்கள், 1,50,625 பெண் வாக்காளா்கள், 23 இதர வாக்காளா்கள் உள்ளனா்.

குன்னம் தொகுதியில் உள்ள 320 வாக்குச்சாவடி மையங்களில் 2,66,224 வாக்காளா்கள் உள்ளனா். இதில், 1,32,115 ஆண்களும், 1,34,095 பெண்களும், 14 இதர வாக்காளா்களும் உள்ளனா். பெரம்பலூா் வட்டத்தில் உள்ள 2 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 2,75,933 ஆண்களும், 2,84,720 பெண்களும், 37 இதரா் என மொத்தம் 5,60,690 வாக்காளா்கள் உள்ளனா்.

மேலும், 14.2.2020 முதல் தொடா் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே, பெயா் சோ்க்க, நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் மேற்கொள்ள தவறியவா்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகங்களில் உரிய படிவத்தை பெற்று பூா்த்தி செய்து அளித்து பயன் பெறலாம் என்றாா் சாந்தா.

மாவட்ட வருவாய் அலுவலா் சி. ராஜேந்திரன், வருவாய் கோட்டாட்சியா் சுப்பையா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொ) சுப்பையா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT