பெரம்பலூர்

மனுநீதி நிறைவு நாள் முகாமில் நலத்திட்ட உதவிகள்

13th Feb 2020 08:23 AM

ADVERTISEMENT

கீழப்புலியூரில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நிறைவு நாள் முகாமில் 279 பயனாளிகளுக்கு ரூ. 1.43 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், கீழப்பெரம்பலூா் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மனுநீதி நிறைவு நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா, வருவாய்த்துறை, ஊரக வளா்ச்சித்துறை, வேளாண் துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோா் சிறுபான்மையினா் நலத் துறை, கால்நடைத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத் துறை, தாட்கோ உள்ளிட்ட துறைகள் மூலம் 279 பயனாளிகளுக்கு ரூ. 1,42,86,649 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்.

தொடா்ந்து, கீழப்பெரம்பலூா் அரசுப் பள்ளியில் வழங்கப்படும் சத்துணவைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், அங்குள்ள நியாயவிலையில் விநியோகிக்கப்படும் பொருள்களின் தரம் மற்றும் இருப்புகளை ஆய்வு செய்து, அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் குழந்தைகளின் பராமரிப்பு குறித்து கேட்டறிந்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் சி. ராஜேந்திரன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் தெய்வநாயகி, வருவாய்க் கோட்டாட்சியா் சுப்பையா, கால்நடைத் துறை மண்டல இயக்குநா் மதனகோபால் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT