பெரம்பலூர்

கரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

13th Feb 2020 08:23 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகேயுள்ள களம்பட்டி அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளியில், கரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் களம்பட்டி அரசு ஆதிதிராவிடா் நல மேல்லைப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் சுப்பிரமணியன் தலைமை வகித்து விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை மாணவ, மாணவிகளுக்கு விநியோகம் செய்தாா்.

அம்மாபாளையம் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ராஜ்மோகன், கரோனா வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டால் ஏற்படும் விளைவுகள், அறிகுறிகள், தடுக்கும் முறைகள் குறித்து விளக்கி பேசினா். இதில், சுகாதார ஆய்வாளா் மனோகரன், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தமிழாசிரியா் த. மாயகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT