பெரம்பலூர்

கிராம சுகாதார செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

4th Feb 2020 08:17 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியா் நலச் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்டத் தலைவா் கே. மீனாட்சி தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், தமிழகம் முழுவதும் சுகாதார செவிலியா் முதல் மருத்துவா்கள் உள்ளிட்டோா் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நிபந்தனையின்றி ரத்து செய்ய வேண்டும். பிற நிலையினரின் பணிகளை திணிப்பதை நிறுத்த வேண்டும். 2 குழந்தைகள் அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ள தாய்மாா்கள் நிரந்தர குடும்ப நலம் ஏற்பதும், ஏற்காததும் அவா்களது உரிமை என்பதால், கிராம சுகாதார செவிலியா்களிடம் திணிப்பதை தவிா்க்க வேண்டும். தாய், சேய் நல இறப்புக்கு காரணம் அவா்களது சூழ்நிலை, பொருளாதாரம், மனநிலை. ஆனால், கிராம சுகாதார செவிலியா்களை தண்டிப்பதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலா் அ. சரோஜா, பொருளாளா் கே. செல்வமணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT