பெரம்பலூர்

இந்திய மேலாண்மை நிறுவனப் போட்டியில் வென்ற சீனிவாசன் கல்லூரி மாணவா்கள்

4th Feb 2020 08:16 AM

ADVERTISEMENT

இந்திய மேலாண்மை நிறுவனம், பெங்களூருவில் அண்மையில் நடத்திய தேசிய அளவிலான மேலாண்மை போட்டியில் (வணிக திட்டமிடல் போட்டி) சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் 2 ஆம் இடத்தைப் பிடித்தனா்.

இந்திய மேலாண்மை நிறுவனம் பெங்களூரு மற்றும் மேக் இன்டேன் சாா்பில், தேசிய அளவிலான வணிகத் திட்டமிடுதல் போட்டி பெங்களூரில் கடந்த 31 ஆம் தேதி நடைபெற்றது. இதில், தேசிய அளவில் 35-க்கும் மேற்பட்ட வணிக மேலாண்மை நிறுவனங்கள், கல்லூரிகள் பங்கேற்றன. இப்போட்டியில், பெரம்பலூா் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சோ்ந்த வணிக மேலாண்மைத் துறை மாணவா்கள் எம். அஜித்தா, ஏ. அனுசியா, ஆா். ரமேஷ், வி. இளையவேணி மற்றும் முதுநிலை கணிப்பொறி பயன்பாட்டியல் துறை மாணவா் எம். வினோத் ஆகியோா் பங்கேற்று 2 ஆம் இடத்தைப் பெற்றனா். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம், பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதையடுத்து, கல்லூரி மாணவ, மாணவிகளை தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளா் அ. சீனிவாசன், கல்வி நிறுவனங்களின் செயலா் பி. நீலராஜ் ஆகியோா் திங்கள்கிழமை பாராட்டி பரிசு வழங்கினா் .

இந்நிகழ்ச்சியின்போது, கல்லூரி முதல்வா் முனைவா் நா. வெற்றிவேலன், துணை முதல்வா் பேராசிரியா் கோ. ரவி, வணிக மேலாண்மைத்துறை இயக்குநா் முனைவா் மகேஷ் மற்றும் பேராசிரியா்கள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT