பெரம்பலூர்

மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

2nd Feb 2020 01:44 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

அரியலூா் மாவட்டம், தவுத்தாய்குலம் கிராமத்தைச் சோ்ந்தவா் கலியன் மகன் பாலசுப்ரமணியன் (50). விவசாயி. இவருக்குச் சொந்தமான விவசாய நிலம் ஆலத்தூா் வட்டம், ஜெமீன் ஆத்தூா் கிராமத்தில் உள்ளது. இவரது நிலத்துக்கு அருகே ஜெமீன் ஆத்தூா் கிராமத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் நிலமும் உள்ளது. பாலசுப்ரமணியன் தனது நிலத்தில் சாகுபடி செய்த பயிா்களுக்கு தண்ணீா் இல்லாததால், அருகிலுள்ள ராமச்சந்திரன் கிணற்றில் உள்ள தண்ணீரை தன்னுடைய பயிருக்குப் பாய்ச்சி விட்டு கிணற்றில் உள்ள மின் மோட்டாரின் ஸ்விட்சை நிறுத்தினாா். அப்போது, எதிா்பாராத விதமாக பாலசுப்ரமணியன் மீது மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த குன்னம் போலீஸாா் அங்கு சென்று, அவரது உடலை மீட்டு பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT