பெரம்பலூர்

கிருஷ்ணாபுரத்தில் நாளை பருத்தி ஏலம்

1st Feb 2020 02:44 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்க அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 2) பருத்தி ஏலம் நடைபெறுகிறது.

திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்க கொங்கணாபுரம் கிளையும், பெரம்பலூா் வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கமும் இணைந்து இந்த ஏலம் நடைபெறுகிறது. தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமைதோறும் பருத்தி ஏலம் நடைபெறும்.

எனவே, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது பருத்தியை கொண்டுவந்து ஏல முறையில் சரியான எடை மற்றும் அதிக விலைக்கு விற்று பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT