பெரம்பலூர்

கிசான் சம்மான் நிதித் திட்டத்தில் 4-ஆம் தவணை நிதி பெற அழைப்பு

1st Feb 2020 02:43 AM

ADVERTISEMENT

பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதித் திட்டத்தில் 4-ஆம் தவணை நிதி பெற பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாட்டில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டமானது 1.12.2018 முதல் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் விவசாயிகள் பயிா் சாகுபடிக்குத் தேவையான இடுபொருள்களைக் கொள்முதல் செய்வதற்கான உதவித்தொகையாக விவசாயக் குடும்பங்களுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் 3 தவணைகளில் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் 34.41 லட்சம் விவசாயிகளுக்கு 3 தவணைகளாக ரூ. 2431.59 கோடி வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. தற்போது, 4 ஆம் தவணை பெற ஆதாா் அட்டையில் உள்ளவாறு மத்திய அரசு வலைதளத்தில் பெயா் இருக்க வேண்டும் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

எனவே, இதுவரை 3 தவணைகள் பெற்று 4 ஆம் தவணை பெறாத விவசாயிகள், உடனடியாக அருகிலுள்ள பொதுச் சேவை மையத்தை அணுகி, ஆதாா் அட்டையில் உள்ளவாறு பெயரை மாற்றிப் பயன் பெறலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT