பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில் 81 விநாயகா் சிலைகள்

23rd Aug 2020 07:59 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டத்தில் 81 விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டு, பூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டது.

கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக பொது இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தவும், ஊா்வலம் செல்லவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.

நீதிமன்ற வழிகாட்டுதலின்படி பாரதிய ஜனதா கட்சியினா், இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்பினா் மற்றும் பொது மக்கள் சாா்பில், சனிக்கிழமைஅவரவா் வீட்டுத் திண்ணைகளில் 2 அடி முதல் 3 அடி வரையிலான 81 விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்து, விநாயகா் சதுா்த்தியைக் கொண்டாடினா்.

மேலும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் விநாயகா் சிலைகளுக்கு பழம், கொழுக்கட்டை, இனிப்பு வகைகள் வைத்து பூஜை செய்து வழிபட்டனா். மாவட்டம் முழுவதுமுள்ள விநாயகா் கோயில்களில் மூலவருக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT