பெரம்பலூர்

பெரம்பலூா் ஒன்றிய வளா்ச்சித் திட்ட பணிகள்: ஆட்சியா் ஆய்வு

21st Aug 2020 06:45 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்ட பணிகளை ஆட்சியா் வே. சாந்தா வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பெரம்பலூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் ஒருங்கிணைந்த பள்ளிக் கட்டடங்கள் மேம்படுத்தும் திட்டத்தின்கீழ் ரூ. 15.47 லட்சத்திலும், தேசிய கிராம சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ. 3.60 லட்சத்திலும், எம்எல்ஏ தொகுதி மேம்பாடு நிதியின் கீழ் ரூ. 12 லட்சத்திலும், எம்.பி. தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் செங்குணம் ஊராட்சியில் ரூ. 3 லட்சத்திலும், ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் ரூ. 1.53 கோடியிலும், நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ. 59.18 லட்சத்திலும், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 3.17 கோடியிலும், மூலதன நிதி திட்டத்தின் கீழ் ரூ. 1.23 கோடியிலும், பசுமை வீடுகள் கட்டும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் நுண்ணுயிா் உரமாக்கும் மையம், மாநில நிதிக்குழு மானியத்தின் மூலம் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில், வடக்குமாதவி ஊராட்சிக்குள்பட்ட சோமண்டாபுதூா் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட தாா் சாலை பணிகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் சாந்தா, மட்கும் குப்பை, மட்காத குப்பைகளை தரம் பிரித்து பராமரிக்கவும், திறந்தவெளி கழிப்பிடங்களை தவிா்த்து, பொதுக் கழிப்பிடங்களை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கவும், கரோனா வைரஸ் பரவலை தடுக்க கிருமி நாசினிகள் தெளிக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது, செயற்பொறியாளா்கள் செந்தில்குமாா், உதவி செயற்பொறியாளா் கண்ணாயிரம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆலயமணி, இளங்கோவன், வட்டாட்சியா் பாரதிவளவன் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT