பெரம்பலூர்

மது விற்ற தந்தை-மகன் கைது

7th Apr 2020 01:45 AM

ADVERTISEMENT

பெரம்பலூா்: பெரம்பலூரில் மது விற்பனையில் ஈடுபட்ட தந்தை மற்றும் மகன் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

பெரம்பலூா்- ஆத்தூா் சாலையிலுள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே, மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக, காவல்துறையினருக்கு ஞாயிற்றுக்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது.

இத்தகவலின் பேரில் அங்கு விரைந்த பெரம்பலூா் காவல் நிலையத்தினா், சட்டத்துக்கு புறம்பாக மதுபாட்டில்களை விற்றுக் கொண்டிருந்த பெரம்பலூா் ரோஸ் நகா் நந்தகுமாா் (56), அவரது மகன் மனோஜ்குமாா் (36) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

மேலும் இருவரிடமிருந்து 282 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT