பெரம்பலூர்

பெரம்பலூா் அருகே சரக்குடன் லாரி எரிந்து நாசம்

1st Apr 2020 06:28 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், பாடாலூா் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மைதா ஏற்றிச் சென்ற லாரி எதிா்பாராதவிதமாக செவ்வாய்க்கிழமை அதிகாலை தீப் பிடித்து எரிந்ததில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான மைதா மாவு சேதமடைந்தது.

திண்டுக்கல்லில் இருந்து மைதா மூட்டைகளை ஏற்றிக்கொண்டு, பாண்டிச்சேரிக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரி, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் மாவட்டம், பாடலூா் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக தீப்பிடித்து எரிந்தது. இதையறிந்த ஓட்டுநா், லாரியில் இருந்து கீழே குதித்து உயிா் தப்பினாா். தகவலறிந்த பெரம்பலூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் சம்பவ இடத்துக்குச் சென்று, தீத்தடுப்பு பணிகளில் ஈடுபட்டனா். இந்த விபத்தில், லாரி மற்றும் லாரியில் இருந்த மைதா மூட்டைகள் முற்றிலும் எரிந்து நாசமடைந்தன. இதனால், சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்படைந்தது.

லாரி ஓட்டுநா் கண்ணன் அளித்த புகாரின் பேரில், பாடாலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT