பெரம்பலூர்

மது போதையில் தவறி விழுந்த தொழிலாளி சாவு

22nd Sep 2019 03:45 AM

ADVERTISEMENT


பெரம்பலூரில் மது போதையில் தவறி கீழே விழுந்த கூலித்தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தார். 
திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள பி.கே.அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னப்பன் மகன் முருகேசன் (38). இவர், பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள டைலர் கடையில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த 2 நாள்களாக பணிக்குச் செல்லாமல், பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் மது போதையில் சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது. 
இந்த நிலையில், புறநகர் பேருந்து நிலையம் எதிரேயுள்ள வணிக வளாகம் பகுதியில் சனிக்கிழமை மதியம் மது போதையில் கீழே விழுந்த முருகேசன் பலத்த காயமடைந்து, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த போலீஸார் அங்குசென்று, அவரது உடலை மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT