பெரம்பலூர்

தோட்டக்கலைத்துறை மூலம் பனைவிதை நடவு

22nd Sep 2019 03:43 AM

ADVERTISEMENT


பெரம்பலூர் மாவட்ட தோட்டக்கலைத்துறை மூலம் பனை விதை நடவு முகாம் மற்றும் ஊரக காய்கறி உற்பத்தித் திட்டத்தின் கீழ் விதை விநியோக நிகழ்ச்சி களரம்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டத்தில் தோட்டக்கலை துறை மூலம் 2019- 2020 பருவ ஆண்டில் தேசிய தோட்டக்கலை இயக்கம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், நுண்ணீர் பாசனத் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
களரம்பட்டியில் நடைபெற்ற முகாமுக்கு தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் அன்புராஜன் தலைமை வகித்து, பனை விதை நடவு முகாமை தொடக்கி வைத்து, விவசாயிகளுக்கு காய்கறி விதை பாக்கெட் மற்றும் இயற்கை உரம் ஆகியவற்றை வழங்கினார். 
தொடர்ந்து, சடையான் குட்டையில் 9 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு, 50 விவசாயிகளுக்கு காய்கறி விதை பாக்கெட்டுகளும், இயற்கை உரமும் வழங்கப்பட்டது. 
இதில், துணை தோட்டக்கலை அலுவலர் விஜயகாண்டீபன், உதவி அலுவலர்கள் கனகராஜ், வீரபாண்டியன், சந்திரசேகரன், கோபி மற்றும் விவசாயிகள் பலர் பங்கேற்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT