பெரம்பலூர்

காருகுடியில் உ.வே.சா நினைவுப் படிப்பகம் திறப்பு

17th Sep 2019 08:55 AM

ADVERTISEMENT

காருகுடி கிராமத்தில் உ.வே.சா. நினைவு மக்கள் படிப்பகம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
காருகுடி மாரியம்மன் கோயில் திடலில் அமைக்கப்பட்டுள்ள படிப்பகத் திறப்பு விழாவுக்கு, ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் சிவசாமி தலைமை வகித்தார்.  சின்ன வெண்மணி வளவனார் சிந்தனைச் சோலை நிர்வாகி வீரபாண்டியன் முன்னிலை வகித்தார்.
நெய்வேலி வாலறிவன் குறள்நெறிக் கழக நிர்வாகி செழியன், ஆசிரியர் கஸ்தூரி, பேராசிரியர் க. தமிழ்மாறன், வரலாற்று ஆய்வாளர் ஜெயபால் ரத்தினம், கொளக்காநத்தத்தம் நூலகர் ராஜா ஆகியோர் வாழ்த்தி பேசினர். 
வாலறிவன் குறள்நெறிக் கழக நிர்வாகி மேத்தாவாணன் சிறப்புரையாற்றினார். முகில் முருகன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். விழாவுக்கான ஏற்பாடுகளை சூழலியல் செயல்பாட்டாளர் ரமேசு கருப்பையா, வெண்மணி வரதராஜன், இலந்தங்குழி ஜெயசீலன் மற்றும் காருகுடி இளைஞர்கள் செய்திருந்தனர். விழாவில் சமூக ஆர்வலர்கள் சிவசாமி, பாண்டுரெங்கன், கண்ணப்பன், பொ. செல்வரங்கம், சுந்தரபாண்டியன், முத்தமிழ்செல்வி, சுந்தர்ராஜன், ரமேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இறுதியில், திருவள்ளுவர், உ. வே. சா, 
அறிஞர் அண்ணா ஆகியோரின் உருவப் படங்களுடன் அப்பகுதி மக்கள் ஊர்வலமாகச் சென்றனர்.
இப்படிப்பகத்துக்கு, சின்ன வெண்மணி வளவனார் சிந்தனைச் சோலை, நெய்வேலி வாலறிவன் குறள் நெறிக்கழகம், பெரம்பலூர் மண்ணின் மக்கள் குழு, காருகுடி பொதுமக்கள்  சார்பில் சுமார் ரூ. 70 ஆயிரம் மதிப்புள்ள 1,700 நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. 
நூல்களை வைப்பதற்காக ரூ. 20 ஆயிரம் மதிப்பில் கண்ணாடி பேழைகளை கிராம பொது மக்கள் வழங்கினர்.  

ADVERTISEMENT
ADVERTISEMENT