பெரம்பலூர்

இரட்டைக் கொலை வழக்கில் மூவர் கைது

17th Sep 2019 09:39 AM

ADVERTISEMENT

பெரம்பலூர் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்த இரட்டைக் கொலை தொடர்பாக,  3 பேரை குன்னம் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
 குன்னம் வட்டம், நல்லறிக்கை கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு மதுக்கடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில்,  வே.சண்முகத்தை ஆனந்த் என்பவர் கத்தியால் குத்திக்கொலை செய்தார்.  இதையறிந்த சண்முகத்தின் சகோதரர் முருகானந்தம், அவரது உறவினர்கள் சிலர், ஆனந்தை மதுக்கடையில்  பாட்டிலால் குத்திக்கொலை செய்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிந்த குன்னம் போலீஸார், நல்லறிக்கை கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம் மகன் முருகானந்தம் (38), அவரது உறவினர்களான அண்ணாமலை மகன் ஆனைமுத்து (50) மற்றும் கவியரசன் (27) ஆகியோரை கைது செய்து திங்கள்கிழமை சிறையில் அடைத்தனர்.
பிரேத பரிசோதனைக்குப் பிறகு ஆனந்த், சண்முகம் ஆகியோரது உடல்கள் திங்கள்கிழமை மாலை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT