பெரம்பலூர்

பெரம்பலூரில் பரவலான மழை

13th Sep 2019 09:45 AM

ADVERTISEMENT

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கடுமையான வெப்ப நிலை காணப்பட்டது. இந்நிலையில் கடந்த 3 நாள்களாக மாலை நேரங்களில் இதமான தட்பவெப்ப நிலையும், இரவு நேரத்தில் மிதமான மழை பெய்துவருகிறது. அதன்படி, புதன்கிழமை காலை 8 மணி முதல் வியாழக்கிழமை காலை 8 மணி வரை பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம்:
செட்டிகுளம்- 12 மி.மீ, பாடாலூர்- 22 மி.மீ, அகரம் சிகூர் -35 மி.மீ, லப்பைக்குடிகாடு- 25 மி.மீ, புதுவேட்டக்குடி- 11 மி.மீ, பெரம்பலூர்- 23 மி.மீ, எறையூர்- 15 மி.மீ, கிருஷ்ணாபுரம்- 8 மி.மீ, தழுதாழை- 11 மி.மீ, வி.களத்தூர்- 7 மி.மீ, வேப்பந்தட்டை-5 மி.மீ என மொத்தம் 174 மி.மீ. மழை பெய்துள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT