பெரம்பலூர்

மகளிருக்கான டென்னிஸ் போட்டி: தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி சிறப்பிடம்

7th Sep 2019 10:14 AM

ADVERTISEMENT

பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உடற்கல்வியியல் கல்லூரிகளுக்கு இடையேயான மகளிர் டென்னிஸ் போட்டியில், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் உடற்கல்வியியல் கல்லூரி மாணவிகள் முதலிடம் பெற்றனர்.
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் சார்பில், கல்லூரிகளுக்கு இடையேயான மகளிர் டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இப்போட்டியை, தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன் தொடக்கி வைத்தார். இதில், சென்னை தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம், ஒய்.எம்.சி.ஏ உடற்கல்வியியல் கல்லூரி, திருநெல்வேலி ஜெயின் ஜான்ஸ் உடற்கல்வியியல் கல்லூரி, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் உடற்கல்வியியல் கல்லூரிகளைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனைகள் பங்கேற்றனர்.இப்போட்டியில், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் உடற்கல்வியியல் கல்லூரி மாணவிகள் முதலிடமும், திருநெல்வேலி ஜெயின் ஜான்ஸ் உடற்கல்வியியல் கல்லூரி மாணவிகள் இரண்டாம் இடமும் பெற்றனர். 
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தனலட்சுமி சீனிவாசன் கல்வியியல் கல்லூரி முதல்வர் கே. சாந்தகுமாரி, தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்வியியல் கல்லூரி முதல்வர் எம். ராஜலட்சுமி, தனலட்சுமி சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் எச். அப்ரோஸ் ஆகியோர் பரிசுக் கோப்பைகள் வழங்கி பாராட்டினர். 
இந்நிகழ்ச்சியில், தனலட்சுமி சீனிவாசன கல்வி நிறுவனங்களின் இயக்குநர் கண்ணன் ஜெகதலன் கிருஷ்ணன், முனைவர் பி. குழந்தைவேல், உடற்கல்வி இயக்குநர்கள் உள்பட பேராசிரியர்கள், விளையாட்டு வீராங்கனைகள் பங்கேற்றனர். கல்லூரி முதல்வர் ஜி. பாஸ்கரன் வரவேற்றார். பேராசிரியர் கே. வெங்கடேசன் நன்றி கூறினார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT