பெரம்பலூர்

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு

7th Sep 2019 10:16 AM

ADVERTISEMENT

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுபெற்ற ஆசிரியர்களை வெள்ளிக்கிழமை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.  
செப். 5ஆம் தேதி கொண்டாடப்படும் ஆசிரியர் தின விழாவையொட்டி, ஆசிரியர்களின் தன்னலமற்ற பணிகளை போற்றும் விதத்தில், தமிழக அரசு பாராட்டு பத்திரம், வெள்ளி பதக்கம், ரூ. 10 ஆயிரம் காசோலையுடன் நல்லாசிரியர் விருது வழங்கி கெளரவித்து வருகிறது.  
அதன்படி, 2019- 2020 ஆம் கல்வி ஆண்டில் கல்வித்துறை சார்பில் பெரம்பலூர் மாவட்டம், செட்டிக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி உடல்கல்வி ஆசிரியர் அன்பரசு, குன்னம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சா. பிரியா, இரூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ந. மலர்கொடி, களரம்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் தே. சாலமன், அல்லிநகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பா. ராஜேஸ்வரி, பாளையம் ஆர்.சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சூசைமேரி, பெரம்பலூர் தந்தை ரோவர் தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் கதீஜா பேகம், துறைமங்கலம் டி.இ.எல்.சி தொடக்கப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஐ. குணவள்ளி, கீழப்புலியூர் சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ப. முருகேசன், வேப்பூர் ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி நிறுவன முதல்வர் சி. குணசேகரன் ஆகியோருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி தமிழக அரசு கெளரவித்தது.  
தொடர்ந்து, நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,  மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா வெள்ளிக்கிழமை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT