பெரம்பலூர்

கடனுதவிகள் பெற விண்ணப்பிக்கலாம்

7th Sep 2019 10:15 AM

ADVERTISEMENT

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் கடனுதவிகள் பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா வெளியிட்ட செய்திக்குறிப்பு: சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்திடும் விதமாக, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் (டாம்கோ) மூலம் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. 
தனிநபர் தொழில் தொடங்க கடனுதவி ரூ. 50 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ. 30 லட்சம் வரையிலும், சுய உதவிக் குழுக்களுக்கான சிறுகடன் திட்டத்தில் உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது.
சிறுபான்மையின மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை, தொழில்கல்வி, தொழில்நுட்பக் கல்வி மற்றும் குறுகிய கால உயர்திறன் வளர்ச்சி படிப்பு பயிலுவதற்கு அதிகபட்சம் ரூ. 9 லட்சம் வரையிலும் கடனுதவி பெறலாம். கடன் திட்டங்கள் அனைத்தும் சிறுபான்மையின வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு நிபந்தனைக்குள்பட்டு குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது. கடனுதவி பெற, அருகிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகலாம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT