பெரம்பலூர்

பேரளி பகுதியில் நாளை மின்தடை

4th Sep 2019 08:48 AM

ADVERTISEMENT

பெரம்பலூர் அருகேயுள்ள பேரளி பகுதியில் வியாழக்கிழமை (செப். 5) மின் விநியோகம் இருக்காது. 
பெரம்பலூர் மின் கோட்டத்துக்குள்பட்ட பேரளி துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறகிறது. இதனால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான பேரளி, மருவத்தூர், ஒதியம், பனங்கூர், கல்பாடி, அசூர், சித்தளி, பீல்பாடி, குரும்பாபாளையம் ஆகிய கிராமிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளார் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மாணிக்கம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT