பெரம்பலூர்

நாட்டு வெடி வெடித்து இளைஞர் காயம்

4th Sep 2019 08:47 AM

ADVERTISEMENT

பெரம்பலூர் அருகே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திங்கள்கிழமை இரவு அனுமதியின்றி நாட்டு வெடி வெடித்ததில் இளைஞரின் விரல்கள் சேதமடைந்தன.
பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூர் கிராமத்தில் திங்கள்கிழணை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை நிகழ்வுக்காக இளைஞர்கள் சிலர், மேட்டாங்காடு கிராமத்தைச் சேர்ந்த நாட்டு வெடி வைப்பவரான ரவியிடம் தெரிவித்தனர். 
இதையடுத்து, இவரிடம் கூலி வேலை செய்பவரான மேலப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா (19), எளம்பலூர் கிராமத்தில் திங்கள்கிழமை இரவு நாட்டு வெடி வெடித்தார். அப்போது, ஒரு நாட்டு வெடிக்காததையறிந்த இளையராஜா, அதை எடுத்தபோது எதிர்பாராதவிதமாக வெடித்தது. இதில், இளையராஜாவின் 4 விரல்கள் சிதறித் துண்டானது. பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளையராஜா, தீவிர சிகிச்சைக்காக திருச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து எளம்பலூர் கிராம நிர்வாக அலுவலர் சேகர் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT