பெரம்பலூர்

சாரதா மகளிர் கல்லூரியில் வணிகவியல் பேரவை தொடக்கம்

4th Sep 2019 08:48 AM

ADVERTISEMENT

பெரம்பலூர் ஸ்ரீசாரதா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை சங்க தொடக்க விழாசெவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இவ்விழாவுக்கு ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம். சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார்.  செயலர் எம்.எஸ். விவேகானந்தன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் எம். சுபலெட்சுமி அறிமுக உரையாற்றினார்.  
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திருச்சிராப்பள்ளி காவேரி மகளிர் கல்லூரி வணிகவியல் துறை பேராசிரியை முனைவர் டி. சரளா, வர்த்தகம் மற்றும் நிர்வாகத்தில் சமீபத்திய நிலை எனும் தலைப்பில், இ காமர்ஸ், இ பேங்கிங், இ. மார்க்கெட்டிங், இ. லேர்னிங் குறித்து விளக்கி பேசினார். விழாவில், வணிகவியல் துறையைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.  
விழா ஏற்பாடுகளை வணிகவியல் துறைத்தலைவி ஆர். ஷீலா ஜெருசா தலைமையிலான பேராசிரியர்கள் செய்திருந்தனர். 
இளங்கலை வணிகவியல்துறை மாணவி எஸ். கீதா வரவேற்றார். மாணவி பி. பிரியதர்ஷினி நன்றி கூறினார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT