பெரம்பலூர்

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

4th Sep 2019 08:46 AM

ADVERTISEMENT

பெரம்பலூர் மாவட்டம், முருக்கன்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.  
இந்த ஆய்வில், சிகிச்சை பெறவந்த நோயாளிகளிடம் சிகிச்சையின் தன்மை, வழங்கப்படும் மருந்துகள் குறித்து கேட்டறிந்த ஆட்சியர், மருந்துகளின் இருப்பு விவரம், அடிப்படை வசதிகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், நோயாளிகளுக்குத் தேவையான இருக்கை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்ட ஆட்சியர், நோயாளிகளின் விவரங்கள் பதியப்படும் பதிவேடுகளையும், ரத்தப் பரிசோதனை செய்து அதன் விவரங்களை தெரிவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கருவிகளையும், மருந்தகம், உள் நோயாளிகள் பிரிவு, கர்ப்பிணித் தாய்மார்கள் பிரிவு, ஆய்வகங்களைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் ஆட்சியர் சாந்தா.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT