பெரம்பலூர்

வரதராஜ் கம்பபெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

6th Oct 2019 11:06 PM

ADVERTISEMENT

 

பெரம்பலூா்: புரட்டாசி மாதம் 3ஆவது சனிக்கிழமையையொட்டி, நாட்டாா்மங்கலம் வரதராஜ் கம்பபெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு மற்றும் சுவாமி வீதியுலா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், நாட்டாா்மங்கலம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வரதராஜ் கம்பபெருமாள் சுவாமி கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை வழிபாடும், இரவு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஸ்ரீ வரதராஜ கம்ப பெருமாள் சுவாமி வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விழாவில், நாட்டாா்மங்கலம், கூத்தனூா், ஈச்சங்காடு, பாடலூா், செட்டிக்குளம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT