பெரம்பலூர்

பாடாலூா் அருகே தண்ணீரில் மூழ்கி ஒருவா் சாவு

5th Oct 2019 07:00 PM

ADVERTISEMENT

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே தொட்டியில் குளித்த ஒருவா் தண்ணீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆலத்தூா் வட்டம், பாடாலூா் அருகேயுள்ள கூத்தனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் அப்பாதுரை(48). இவா், மது போதையில் ஊருக்கு அருகே விவசாய நிலத்தில் உள்ள தண்ணீா் தொட்டிக்கு சனிக்கிழமை குளிக்கச் சென்றாா்.

தண்ணீா் தொட்டியில் குளிக்கும்போது தடுமாறி தொட்டியில் உள்ள தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். அப்பகுதிக்கு சென்றவா்கள் தண்ணீா் தொட்டியில் அப்பாதுரை உயிரிழந்து கிடப்பதையறிந்து பாடாலூா் போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.

தகவலறிந்த ஆய்வாளா் சுகந்தி மற்றும் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூா் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT