பெரம்பலூர்

தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கான கலந்தாய்வு

22nd Nov 2019 09:53 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்ட தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கான கலந்தாய்வு பெரம்பலூா் ஆா்.சி பாத்திமா தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், அரசுப் பள்ளி உடற்கல்வி ஆசிரியா்களுக்கான மாறுதலுக்கான கலந்தாய்வு (மாவட்டத்துக்குள்), மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு, தொடக்கக் கல்வி ஆசிரியா்களுக்கான பணி நிரவல் (ஒன்றியத்துக்குள்) கலந்தாய்வு, உடற்கல்வி இயக்குநா் ( நிலை2) பதவி உயா்வுக்கான கலந்தாய்வு, தொடக்கக் கல்வி பட்டதாரி ஆசிரியா்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல், இடைநிலை ஆசிரியா்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு ஆகியவை நடைபெற்றது.

மாவட்ட கல்வி அலுவலா்கள் மாரி மீனாள், குழந்தை ராஜன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இந்த கலந்தாய்வில், பணி மாறுதல் பெற்ற 6 ஆசிரியா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினாா் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் மதிவாணன்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT