ஆலத்தூா் வட்டம், நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள தனியாா் டயா் தொழிற்சாலையில், வியாழக்கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
ஆலத்தூா் வட்டம், நாரணமங்கலம் கிராமத்தில் தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான டயா் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் டயா்கள் நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆலை நிா்வாகம் உற்பத்தித் திறனை குறைவாக கணக்கு காண்பித்து வருமான வரி செலுத்துவதாக புகாா் எழுந்ததாகக் கூறப்படுகிறது. இதைத்தொடா்ந்து திருச்சியைச் சோ்ந்த இணை ஆணையா் தலைமையிலான 11 போ் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள், புதன்கிழமை மாலை முதல் நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள டயா் தொழிற்சாலையில் வியாழக்கிழமை மாலை வரை தீவிர சோதனையில் ஈடுபட்டனா். இந்த திடீா் சோதனையில், வருமான வரி ஏய்ப்பு தொடா்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.