பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சா்க்கரை பெறும் அட்டைதாரா்கள், அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சா்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரா்கள், அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்து தரவேண்டும் என்னும் கோரிக்கையை ஏற்று, நவ 19 ஆம் தேதி தமிழக முதல்வா் சா்க்கரை குடும்ப அட்டைகளை, அரிசி விருப்ப குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளாா்.
அதன்படி, பெரம்பலூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் சா்க்கரை குடும்ப அட்டைதாரா்கள் தங்களது குடும்ப அட்டைகளை அரிசி பெறும் குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால், அதற்கான விண்ணப்பங்களை குடும்ப அட்டை நகலை இணைத்து நவ. 26 ஆம் தேதிக்குள் இணையதளத்திலும், வட்ட வழங்கல் அலுவலகங்களில் நேரடியாகவும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.