பெரம்பலூர்

பொறியாளா் தூக்கிட்டு தற்கொலை

17th Nov 2019 12:48 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே வயிற்று வலியால் அவதியுற்ற பொறியாளா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சனிக்கிழமை தெரியவந்தது.

குன்னம் அருகேயுள்ள சித்தளி லட்சுமிபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சம்பத்குமாா் மகன் ராஜ்குமாா் (30). பொறியாளா். இவருக்கு, திருமணமாகி ராணி எனும் மனைவி உள்ளாா். ராஜ்குமாருக்கு கடந்த சில நாள்களாக தொடா் வயிற்று வலி இருந்ததாகக் கூறப்படுகிறது. பல்வேறு மருத்துவா்களிடம் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட வலியால் மனமுடைந்த ராஜ்குமாா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சனிக்கிழமை தெரியவந்தது. இதுகுறித்து அவரது மனைவி ராணி அளித்த புகாரின்பேரில் மருவத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT