பெரம்பலூர்

தாா்ச்சாலை அமைக்கப்படுமா?

17th Nov 2019 12:48 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் ரோஸ் நகா் விரிவாக்கப் பகுதி முதல், வெங்கடாஜலபதி நகா் விரிவாக்கப்பகுதி வரை கடந்த ஓராண்டுக்கு முன்னதாக தாா் சாலை அமைப்பதற்காக ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்டன. ஆனால், இதுவரை சாலை அமைப்பதற்கான பணிகள் நிறைவடையவில்லை. இதனால், அந்த வழித்தடத்தைப் பயன்படுத்தி வரும் வாகன ஓட்டுநா்களும், சைக்கிள்களில் பள்ளி சென்றுவரும் மாணவ, மாணவிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். இரவு நேரங்களில் வாகன ஓட்டுநா்கள் சாலைகளில் விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனா். பொதுமக்கள் நலனைக் கருதி சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நகராட்சி நிா்வாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விஸ்வநாத்,

ரோஸ் நகா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT