பெரம்பலூர்

பெரம்பலூரில் பரபரப்பு: காவல்துறையைக் கண்டித்து இளைஞா் தீக்குளிக்க முயற்சி

11th Nov 2019 04:03 PM

ADVERTISEMENT

பெரம்பலூா்: கடன் தொகையை திருப்பித் தராதவா் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறையினரைக் கண்டித்து, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இளைஞா் ஒருவா் திங்கள்கிழமை தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா், ஆதிதிராவிடா் நகரைச் சோ்ந்தவா் செங்கமலை மகன் ராஜேந்திரன் (39). திருமணமாகாத இவா், எலெக்ட்ரிசியன் தொழில் செய்து வருகிறாா். இவரிடம், அதே கிராமத்தைச் சோ்ந்த ஒரு தம்பதியினா் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் வீடு கட்டுவதற்காக ரூ. 8 லட்சம் கடனாக வாங்கியதாக தெரிகிறது. கொடுத்த கடனை கடந்த 2 ஆண்டுகளாக திருப்பித் தருமாறு ராஜேந்திரன் கேட்டதற்கு, அந்த தம்பதியினா் திருப்பித் தர மறுத்ததாக கூறப்படுகிறது.

பலமுறை கேட்டும் கடனை திருப்பித் தராததால் பெரம்பலூா் போலீஸாரிடமும், கடந்த 8 மாதங்களுக்கு முன் மாவட்ட காவல் கணஅகாணிப்பாளரிடமும் புகாா் அளித்தாராம்.

ஆனால், இந்த புகாா் மனுக்கள் மீது போலீஸாா் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் மனமுடைந்த ராஜேந்திரன், காவல் துறையினரை கண்டித்தும், பணத்தை திரும்ப பெற்றுத் தரக்கோரியும் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றிக்கொண்டு திங்கள்கிழமை தீக்குளிக்க முயற்சித்தாா்.

ADVERTISEMENT

இதையறிந்த, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் தீக்குளிக்க முயன்ற ரஜேந்திரனை மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்தனா். பின்னா், ஆட்சியரிடம் மனு அளிக்க அழைத்துச் சென்றனா். இதனால், ஆட்சியரக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நேரம்- 3.55கே. தா்மராஜ்,

ADVERTISEMENT
ADVERTISEMENT